விக்கிரவாண்டியில் சூர்யா கல்லுாரியில் மாணவர் கூட்டமைப்பு துவக்க விழா

X
விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரியில் மாணவர்கள் கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது.இணைய பாதுகாப்பு துறை சார்பில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார். கல்லுாரி முதல்வர் சங்கர், துணை முதல்வர் ஜெகன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை லட்சுமி தேவி வரவேற்றார்.சின்னசேலம் இதயா மகளிர் பொறியியல் கல்லுாரி முதுகலை கணினி அறிவியல் துறைத் தலைவர் ஜெயசுந்தர், தகவல் தொழில் நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்து மாணவர்களிடையே பேசினார்.துறை தலைவர் சுபா, கல்லுாரி துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story

