திமுகவில் ஆயிரம் புதிய மாணவா்களை சேர்க்க வேண்டும் : மாணவரணி தலைவர் பேச்சு!
Thoothukudi King 24x7 |22 Sep 2024 2:12 AM GMT
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவில் ஆயிரம் புதிய மாணவா்களை சேர்க்க வேண்டும் மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி பேசினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி பொறுப்புக்கான நோ்காணல் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. நேர்காணல் நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். நோ்காணலில் ஓன்றியம் பகுதி பேரூர் கழகத்திற்கு 3 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதிய மாணவரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் நோ்காணல் நடைபெற்றது. மாநில மாணவரணி தலைவர் வக்கீல் ராஜீவ்காந்தி தொடக்க உரையாற்றுகையில் "ஏற்கனவே வடக்கு மாவட்டத்தில் இதற்கு முன்பு இதே அரங்கில் நடைபெற்ற ஓரு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ேடன். திட்டமிட்டு பணியாற்றுவதில் அமைச்சர் கீதாஜீவன் முன் உதாரணமாக செயல்படுவார்கள் முதலமைச்சரால் பெண்சிங்கம் என்று அழைக்கப்பட்ட அவரது மாவட்டத்தில் முதலமைச்சாின் உத்தரவிற்கிணங்க இளைஞர் அணியை போல் மாணவரணியின் கட்டமைப்பும் உருவாக்க வேண்டும் என்ற கட்டளைக்கிணங்க இந்த பணியை மாணவரணி பொறுப்பேற்று தொடங்கியுள்ளது. முக்கியமாக உறுப்பினர் சேர்க்கை என்பது முதலமைச்சாின் உத்தரவுபடி பிளஸ்ஓன் பிளஸ் டூ மாணவர்களை அதிக அளவில் சோ்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக அணி அமைப்பாளா்கள் குறைந்த பட்சம் 50 பேரையும் துணை அமைப்பாளா்கள் 25 பேரையும் சேர்க்க வேண்டும். இதற்கு இரண்டு மாத காலம் அவகாசம் கொடுக்கப்படும். அதை முறைப்படுத்தி பணி செய்யாதவர்கள் பட்டியல் மாவட்ட கழகத்திற்கு கொடுக்கப்பட்டு மேல் நடவடிக்கை மேற்காௌ்ளப்படும். இந்த அணியின் துணை அமைப்பாளர்களில் எப்படி மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் இருக்கின்றார்களோ துைண அமைப்பிற்கு ஐந்தில் இரண்டு பெண்கள் நியமிக்கப்படுவார்கள் இந்த அணியில் இருப்பவர்கள் அண்ணன் தம்பியாகவும் அக்கா தங்கையாகவும் கண்ணியம் தவறாமல் அரசியல் ஆர்வத்தோடு பணியாற்ற வேண்டும். அந்த ஆர்வம் உங்களுக்கு இருக்கிறதா என்பதற்காகதான் இந்த நேர்காணல் நிகழ்வு நடைபெறுகிறது. 3 தொகுதிகளிலும் குறைந்த பட்சம் ஆயிரம் கல்லூாி மாணவர்களை வடக்கு மாவட்ட திமுகவிற்கு நீங்கள் ஓப்படைக்க வேண்டும். அமைச்சர் அவர்கள் அதை 10 ஆயிரம் பேராக உயர்த்திவிடுவார்கள் ஓவ்வொரு கல்லூாியிலும் மாணவர் மன்றத்தை உருவாக்க வேண்டும் என்று பேசினார். திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியாாின் ஆணைக்கிணங்க மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் அறிவுறுத்தலின்போில் 30வயதுக்குட்பட்ட மாணவர்கள் சேர்க்கை நேர்காணல் முகாமில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்பதுடன் திமுகவின் வரலாறுகளையும் கொள்கைகளையும் முழுமையாக தொிந்து கொண்டு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் அமைச்சர் கீதாஜீவனோடு இணைந்து மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மாநில மாணவரணி துணை செயலாளர்கள் அதலை செந்தில்குமார், பூர்ண சங்கீதா, ஆகியோர் நேர்காணல் நடத்தி விண்ணப்ப படிவங்களை கேள்வி பதில்களுடன் பெற்றுக்கொண்டனர். நேர்காணல் நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், மாநகர அணி அமைப்பாளர் டைகர்வினோத், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் கோகுல்நாத், பிரதீபா, கனகராஜ், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர்கள் சத்யா, பாலா, கார்த்திக்கேயன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஓன்றிய செயலாளர்கள் சின்னப்பாண்டியன், ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மூம்மூர்த்தி, முருகேசன், ராதாகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், நிா்மல்ராஜ், ராமகிருஷ்ணன், மேகநாதன், ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story