திமுகவின் ஒரே சிந்தனை உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவது பாஜக தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி
Kangeyam King 24x7 |22 Sep 2024 2:51 AM GMT
மாணவியர்களை போதை பொருட்கள் பயன்படுத்த ஆசிரியரே அழைக்கிறார் என்ன சொல்ல போகின்றார் அன்பில் - அவர்களின் ஒரே சிந்தனை உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவதே - நிர்வாகத்தை ஒழுங்கு படுத்துங்கள் அதுக்கப்புறம் மற்றவை பாருங்கள் தமிழிசை சவுந்தரராஜன் பதில்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள தொட்டிபாளையத்தில் பாஜக காங்கேயம் தொகுதி சார்பில் வடக்கு ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். கூட்டமானது திருப்பூர் தெற்கு மாவட்ட துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாயிண்ட் மணி, நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர் நந்தகுமார், ஒன்றிய தலைவர் கிரிஷ்ணமுர்த்தி, நகர தலைவர் சிவ பிரகாஷ், ஒன்றிய துணை தலைவர் குமார் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது போதைப் பொருட்களின் நடமாட்டம் அண்ணன் திருமாவளவன் தெரிவித்ததை போல் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு நான் மாநாடு நடத்தப் போகின்றேன் என்றார். இப்போது எங்கு பார்த்தாலும் பறந்து, விரிந்து எல்லா இடங்களிலும் போதை தலைவிரித்து ஆடிக் கொண்டுள்ளது. கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் மிக அதிகமாக சர்வ சாதாரணமாக கிடைக்கின்றது, இது கட்டுப்படுத்தப்பட வேண்டும். இது மிகவும் கவலை அளிக்க கூடிய ஒன்றாக இருக்கின்றது. பள்ளியில் வகுப்பு ஆசிரியர் மாணவியை போதைப் பொருட்கள் பயன்படுத்த அழைக்கின்றார். அதேபோல் மாணவர்கள் அதிகப்படியானோர் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். மிகவும் அபாயகரமான ஒரு சூழ்நிலையை தமிழகம் சென்று கொண்டுள்ளது. அதனால் இவைகளை உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். எப்படி போதை எல்லோரையும் பாதித்துக் கொண்டுள்ளதோ அதேபோல் இங்கு பொதுமக்களிடம் நான் கேட்டபோது அவர்கள் சொன்னது நாய்களின் தொந்தரவு மிக அதிகமாக இருக்கிறது. அதாவது மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி என்ன நினைக்கிறார்கள் என்றால் குடும்ப கட்டுப்பாடு செய்துவிட்டு நாய்களை அப்படியே விட்டு விடலாம் அப்படின்னு நினைக்கிறாங்க. அப்படிங்கற முறைய பின்பற்றாங்க. நாய்களினால் ஆடுகள் கடிக்கப்படுவது அதிகமாக இந்த பகுதியில ஆடு வளர்க்கும் மக்கள் இருக்கிறார்கள் என்பதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சென்னையில பார்த்தீர்கள் என்றால் மாடுகளால் குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் உயிரிழக்கும் சூழ்நிலை வந்தது பிறகு அதற்கு ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்தார்கள். அதுபோல அரசாங்கம் எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நாய்கள் அதுவும் உயிரினம் தான் அவற்றை நாம் துன்புறுத்தக் கூடாது. ஆனால் அதே நேரத்தில் நாய்களும் மனிதர்களை துன்புறுத்தாமலும், ஆடுகளை துன்புறுத்தாமலும் இருக்க அரசாங்கம் ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது எனது கருத்து என்றார். இறக்கப்படும் ஆடுகளுக்கு அரசு எவ்வித நஷ்டஈடும் வழங்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தர்ராஜன் பிரதமரின் காப்பீட்டு திட்டங்கள் நல்ல திட்டங்களை எல்லாம் மாநில அரசு சரியாக எடுத்துச் செல்வதில்லை. குறிப்பாக மருத்துவ காப்பீடு திட்டமும் அது போல தான் பயிர் காப்பீட்டு திட்டமும், உயிர் காப்பீட்டு திட்டமும் அப்படித்தான் உள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்கள் என்பதற்காகவே மாநில அரசு பாராபட்சமாக நடந்து கொள்கின்றது. அதனால் அவர்கள் அனுப்பும் தகவல்களை சரியாக அனுப்பி நமது மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் திட்டங்கள் சரியாக பயன்படுத்தப்பட வேண்டும் என நான் கோரிக்கை வைக்கிறேன். அவர்களுடைய ஒரே சிந்தனை உதயநிதி தான் தமிழகத்தில் துணைமுதல்வர் ஆக்குவது. போதைப்பொருட்கள் அதிகமாயிருச்சு சட்ட ஒழுங்கு கிடையாது, திருட்டு அதிகமாகிவிட்டது அதே மாதிரி அண்ணன் ஸ்டாலின் நிறைய தொழிற்சாலை கொண்டு வருகின்றார் என்று சொல்கின்றார், ஆனால் சாம்சங் தொழிற்சாலை மூடி கிடக்குது. பள்ளியில் கிடக்கிற முட்டை வெளியே கிடைக்குது. ஸ்கூல்ல தான் முட்டை (MARK ,மதிப்பெண்) போடுறாங்க என்றால், முட்டை வந்து வெளியேயும் கிடைக்குது இப்ப என்ன சொல்ல போறாரு அன்பில் என்றார். அதனால அவர்களுடைய ஒரே சிந்தனை உதயநிதி துணை முதல்வர் ஆக்குவது . சபாநாயகரிலிருந்து மூத்த அமைச்சர்கள் வரை ஒரே சிந்தனை கண்டிக்கத்தக்கது முதலில் நிர்வாகத்தை ஒழுங்கு படுத்துங்கள் அதுக்கப்புறம் மற்றவை பாருங்கள் இவ்வாறு தெரிவித்தார்.
Next Story