புத்தக கண்காட்சி நடத்தும் இடத்தை கனிமொழி எம்பி ஆய்வு
Thoothukudi King 24x7 |22 Sep 2024 4:19 AM GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 3ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி மற்றும் நெய்தல் திருவிழா நடைபெற உள்ளது இந்த கண்காட்சி நடைபெற உள்ள இடத்தினை பாராளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கருணாநிதி எம்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 3ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி மற்றும் நெய்தல் திருவிழா நடைபெற உள்ளது இந்த கண்காட்சி நடைபெற உள்ள இடத்தினை பாராளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கருணாநிதி எம்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடியில் 5-வது புத்தக திருவிழா, 3-வது நெய்தல் திருவிழா மற்றும் புகைப்பட கண்காட்சி வருகிற அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் உள்ள சங்கரப்பேரி பகுதியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் புத்தக கண்காட்சி நடைபெறும் சங்கரப்பேரியில் உள்ள மைதானத்தை பாராளுமன்ற திமுக குழு தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், ஏஎஸ்பி மதன், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்ட கனிமொழி கருணாநிதி எம்பி அமைக்கப்பட உள்ள புத்தக அரங்கங்கள் குறித்தும் புகைப்பட கண்காட்சிக்கான அரங்கம் அமைப்பது நெய்தல் விழாவுக்கான மேடை அமைப்பது குறித்தும் அதிகாரியிடம் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து இந்த புத்தகத்தில் நடைபெற உள்ள உணவுத் திருவிழாவுக்கான அரங்குகள் அமைக்கும் இடத்தினையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்த புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் விரைவாக நடைபெற்று வருகிறது என்னவும் இந்த புத்தக கண்காட்சியில் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது எனவும் இதற்கான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தெரிவித்தார்.
Next Story