கந்திலி அருகே ஆறு மாத காலமாக பயன்பாட்டுக்கு வராத மேல்நீர் தொட்டி தொட்டி

X
திருப்பத்தூர்மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் சின்னகசிநாயக்கன்பட்டி கிராமம் அந்தேரி வட்டத்தில் 7 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி 6 மாத காலமாக இதுவரை பயன்பாட்டிற்கு வராத அவல நிலை, ஒரு தனிநபர் குடும்பத்தை பழிவாங்கும் நோக்கத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் குடிநீர் இணைப்பு கொடுக்காமல் உள்ளார் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு உடந்தையாக ஊராட்சி செயலாளர் இருந்து வருகிறார் பல்வேறு குற்றச்சாட்டுகள் ஊராட்சி செயலாளர் மீதும் இருந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? அரசு திட்டத்தை கிடப்பில் போட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை பாயுமா? பொதுமக்கள் கண்ணீர் மல்க வேதனை ஊர் தலைவர் மகனுடன் சேர்ந்து முறைகேடுகள் செய்யும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை பாயுமா, ஊராட்சி கணக்கை BDO பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
Next Story

