மயான இடம் ஆக்கிரமிப்பு பிற சமுதாய மக்கள் கோவில் அமைக்க எதிர்ப்பு
Komarapalayam King 24x7 |22 Sep 2024 10:48 AM GMT
குமாரபாளையம் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மயான இடத்தில் பிற சமுதாய மக்கள் கோவில் அமைக்க அப்பகுதியினர் எதிர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மயான இடத்தில் பிற சமுதாய மக்கள் கோவில் அமைக்க அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து அப்பகுதி விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது: குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், வேளாங்காடு பகுதியில் வேட்டுவ சமுதாய மக்களுக்கான 4 ஏக்கர் மயான நிலம் உள்ளது. இதில் ஒன்றரை ஏக்கர் நிலம் ஒருவரால் ஆக்கிரப்பு செய்யப்பட்டிருந்தது. வேட்டுவ சமுதாய மக்கள், மயானத்திற்கு ஓரு பகுதி போக, மீதமுள்ள இடத்தில், தண்ணீர் சேமிக்க குளம் வெட்ட முடிவு செய்து, பணிகள் நடந்து வருகிறது. இதில் ஆக்கிரமிப்பு செய்த நபரை வெளியேற சொல்லிவிட்டு, நான்கு ஏக்கர் நிலம் முழுதும் வேட்டுவ சமுதாய மக்கள் பங்களிப்புடன் கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதில் ஆக்கிரமிப்பு செய்த நபர், மற்றொரு சமுதாய மக்களை தூண்டிவிட்டு அங்கு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடுகல் வைத்து, வழிபாடு செய்யும் மாலா கோவில் அமைக்க எற்படுகளை செய்து வந்தனர். இதற்கு வேட்டுவ சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story