பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சிறப்பித்த வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்.

வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.22.31 இலட்சம் மதிப்பீட்டில் 2 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கார்கூடல்பட்டி, நாரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி, பெரப்பஞ்சோலை மற்றும் மூலக்குறிச்சி உள்ளிட்ட ஊராட்சிகளில் இன்று வனத்துறை அமைச்சர் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.22.31 இலட்சம் மதிப்பீட்டில் 2 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். வனத்துறை அமைச்சர் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் நாரைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் மற்றும் இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நாரைகிணறு ஊராட்சியில் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 22 எதிர் சவ்வூடு பரவல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் ரூ.22.31 இலட்சம் மதிப்பீட்டில் 2 புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து, அயோத்திய தாசர் பண்டிதர் குக்கிராமம் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.3.53 இலட்சம் மதிப்பீட்டில் கார்கூடல்பட்டி ஊராட்சி, ஒன்பதாம்பாலிக்காடு குக்கிராமம், அருந்ததியர் தெரு முருகன் வீடு முதல் அல்லிமுத்து வீடு வரை 65 மீ நீளம், 3 மீ அகலத்திற்கு சிமெண்ட கான்கிரிட் சாலை அமைக்கும் பணி, ரூ.3.58 இலட்சம் மதிப்பீட்டில் ஒன்பதாம்பாலிக்காடு குக்கிராமம், அருந்ததியர் தெரு ராஜ் வீடு முதல் துரைசாமி வீடு வரை 66 மீ நீளம், 3 மீ அகலத்திற்கு சிமெண்ட கான்கிரிட் சாலை அமைக்கும் பணி, ரூ.4.14 இலட்சம் மதிப்பீட்டில் செம்மண்காடு குக்கிராமம், அருந்ததியர் தெரு கந்தசாமி வீடு முதல் அசோகா வீடு வரை 52 மீ நீளம், 3 மீ அகலத்திற்கு சிமெண்ட கான்கிரிட் சாலை அமைக்கும் பணி, பாரத பிரதமர் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.33.27 இலட்சம் மதிப்பீட்டில் முள்ளுக்குறிச்சி ஊராட்சி, உலியபரம் சாலை முதல் தும்பல்பட்டியில் புதியதாக தார்சாலை அமைக்கும் பணி, ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் மூலக்குறிச்சி ஊராட்சி, பெரியகோம்பை சாலை முதல் தும்பல்பட்டி குட்டிகரடு சாலை அமைக்கும் பணி, இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.4.45 இலட்சம் மதிப்பீட்டில் பெரப்பன்சோலை ஊராட்சி, மாவாறு செந்தில் வீடு முதல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வரை 65 மீ நீளத்திற்கு கான்கிரிட் சாலை அமைக்கும் பணி, ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் மாவாறு முத்துகுமார் வீடு டுதல் மணி வீடு வரை சிமெண்ட் கான்கிரிட் சாலை அமைக்கும் பணி, ரூ.4.20 இலட்சம் மதிப்பீட்டில் பெரப்பன்சோலை ஊராட்சி,மேலக்கோம்பை குக்கிராமத்தில் 60 மீ நீளம், 4 மீ அகலத்திற்கு சிமெண்ட் கான்கிரிட் சாலை அமைக்கும் பணி, ரூ.2.93 இலட்சம் மதிப்பீட்டில் மூலக்குறிச்சி ஊராட்சியில், பெரியகுறிச்சி சாமி தொம்மை முதல் புள்ளியப்பன் வீடு வரை கான்கிரிட் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகளுக்கு வனத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
Next Story