பன்னாட்டு லயன் சங்கம் நடத்தும் முப்பெரும் விழா நடைபெற்றது

பன்னாட்டு லயன் சங்கம் நடத்தும் முப்பெரும் விழா நடைபெற்றது
மாவட்ட ஆளுநரின் முதல் வட்டார ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஆசிரியர் தின விழா நடைபெற்றது
போடிநாயக்கனூர் தர்மத்துப்பட்டியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் நடத்தும் முப்பெரும் விழாவின் மாவட்ட ஆளுநரின் முதல் வட்டார ஆலோசனைக் கூட்டம் கூட்டுச் சங்கங்களின் கூட்டம் மற்றும் ஆசிரியர் தின விழா A.H.M Trust வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் 2024 ஆம் ஆண்டிற்கான போடி வட்ட சிறந்த ஆசிரியர்களை கௌரவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. லயன்ஸ் சங்கங்கள் ஆன போடிநாயக்கனூர், கம்பம் இமை, தேவாரம் இமயம் இணைந்து நடத்தினர். இந்நிகழ்ச்சியின் தலைவர் A. முருகன் வட்டாரத் தலைவர் (வட்டாரம் 36) மற்றும் போடிநாயக்கனூர் லயன் சங்கம் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் பங்கேற்றனர். போடிநாயக்கனூர் லயன்ஸ் சங்கத் தலைவர் S.முகமது ஷேக் இப்ராஹிம், செயலாளர் நவநீதகிருஷ்ணன், பொருளாளர் J.சண்முகவிக்னேஷ், கம்பம் இமை தலைவர் R.கண்ணன், செயலாளர் P. கார்த்தீஸ்வரன், பொருளாளர் A. பெரியசாமி , தேவாரம் இமயம் P.T சேகர், செயலாளர் R. மதன் , பொருளாளர் P. ரங்கராஜன் மற்றும் ஆசிரியர் ஆசிரியை பெருமக்களும், முன்னாள் மாவட்ட ஆளுநர், மாவட்ட அமைச்சரவைச் செயலர், மாவட்ட GMT ஒருங்கிணைப்பாளர், மகாத்மா மண்டல தலைவர், தேனி பகுதி ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story