நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனைக்கு தயார்!

நிகழ்வுகள்
புதுக்கோட்டையில் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா வரும் 3ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடக்கிறது. நவராத்திரி நாட்களில் வீடுகளில் கோயில்களில் குழு அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம் இதையொட்டி புதுக்கோட்டை சாந்தநாதர் சுவாமி கோவில் சன்னதி மற்றும் வடக்கு ராஜ வீதியில் உள்ள கடைகளில் பல்வேறு வகையான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. சுவாமி சிற்பங்கள், விலங்குகளின் உருவ பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் என்று ஏராளமான பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நவராத்திரி தொடங்க இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இது பற்றி கடை வியாபாரி ஒருவர் கூறுகையில் கடந்த ஆண்டு விட நடப்பாண்டு புதுவிதமான பொம்மைகள் ஏராளமாக வந்துள்ளன. விலை அதிகரித்து இருந்தாலும் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வதால் விற்பனை சூடு பிடித்துள்ளது.
Next Story