எந்த நிலையிலும் கல்வியை கைவிட்டுவிடக்கூடாது ஆட்சியர் அறிவுரை

X
தூத்துக்குடியில் ‘உயர்வுக்கு படி” இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தி சிறப்புரையாற்றினார் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று(21.09.2024), தமிழ்நாடு திறன் மேமபாட்டு கழகம் மூலம் 2022-2023 மற்றும் 2023-2024-ம் கல்வி ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு பயின்று பள்ளி இறுதி தேர்வு எழுதாதவர்கள், தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வில் வெற்றி பெற்று உயர்கல்வி பெற கல்லூரிகளில் சேராத மாணவர்களுக்கான நான் முதல்வன் ‘உயர்வுக்கு படி” வழிகாட்டல் முகாமில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தாவது: உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி தூத்துக்குடியில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருக்கக்கூடிய மாணவ மாணவியர்கள் 12-ஆம் வகுப்பு முடித்திருக்கக்கூடிய மாணவர்கள் பத்தாவது முடித்து கல்வியை தொடராமல் இருக்கக்கூடிய மாணவர்கள் என ஒவ்வொரு மாணவர்களிடமும் பேசி இந்த நிகழ்விற்கு அழைத்து வந்திருக்கின்றோம். அனைவரும் தங்களுடைய பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதும் அவர்களின் கல்வியை மேம்படுத்துவதும் நம்முடைய ஒவ்வொருவரின் கடமை. மாணவ - மாணவியர்கள் ஆகிய நீங்கள் இந்த வயதில் கல்வி கற்கவில்லை என்றால் வேறு எந்த வயதிலும் உங்களால் கல்வி கற்க முடியாது. நீங்கள் எந்த ஒரு காலத்திலும் கல்வியை கைவிட்டுவிடக் கூடாது. இங்கு இருக்கும் சில மாணவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கு நிச்சயமாக மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து உதவிகளையும் செய்து தருவேன். இதே போன்று மாணவர்களுக்கான உதவியை ஒவ்வொறு கல்வி நிர்வாகமும் கண்டிப்பாக செய்து தர வேண்டும். அரசு கல்லூர்ிகள், அரசு தொழில்நுட்பக் கல்லூரிகள் உயர்கல்வி படிப்பதற்கான உதவிகளை ஏற்கனவே செய்துவருகிறது. மாணவர்கள் தங்கி படிப்பதற்கு மாணவர் விடுதி தேவைபடுகிறது என்றால் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள் மாணவர்கள் தங்கி படிப்பதற்கு விடுதிகளை ஏற்பாடு செய்து தருவார்கள். நீங்கள் அனைவரும் கல்வியை முழுமையாக படிக்க வேண்டும். பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் படிக்கும் போது தான் உங்கள் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்க முடியும். அனைத்து மாணவர்களும் புதிய உற்சாகத்தோடும், புதிய ஆற்றலோடும் படிக்க வேண்டும். நீங்கள் அனைவரும் தொடர்ச்சியாக கல்லூரியில் சேர வேண்டும் எள்று நான் உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்தநிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்து வந்த பெற்றோர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோல். உங்களுக்கு நிரைய கடன்கள், சிக்கல்கள் இருக்கலாம், இந்த சிக்கள்கள், சிரமங்கள்களை மனதில் வைத்து கொண்டு உங்களது பிள்ளைகளின் படிப்பை நிறுத்தி விடக்கூடாது. இந்த காலக்கட்டங்களில் தான் நீங்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
Next Story

