ராமநாதபுரம் மருத்துவமனைக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டது

ராம்நாத் ஈஸ்ட் கோஸ்ட் சங்கம் சார்பில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பயிற்சி மருத்துவர்கள் பாதுகாப்பிற்காக வாக்கி-டாக்கி வழங்கினர்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, இளநிலை மற்றும் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நோயாளிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, ரோந்து மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு அளவில் முதல் முறையாக ஈஸ்ட் கோஸ்ட் இராம்நாட் ரோட்டரி சங்கம் சார்பில் வாக்கி-டாக்கி கருவிகளை ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு தினேஷ் பாபு மருத்துவகல்லூரி முதல்வர் டாக்டர்.சுபிதா விடம் வழங்கினார். இதில் மண்டல உதவி ஆளுநர் டாக்டர்.ரம்யா தினேஷ், முன்னாள் உதவி ஆளுநர் சுகுமார், சங்கத் தலைவர் செங்குட்டுவன் மற்றும் உறுப்பினர்கள் கே.ஆர்.மணிகண்டன், மற்றும் டாக்டர். பாலசுப்ரமணியன், மருத்துவமனை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, நிலைய மருத்துவ அலுவலர் மனோஜ் குமார் உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் கண்ணகி, சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
Next Story