கரூர் சுற்றுவட்டார பகுதியில் திடீர் மழை. பொதுமக்கள் மகிழ்ச்சி.

கரூர் சுற்றுவட்டார பகுதியில் திடீர் மழை. பொதுமக்கள் மகிழ்ச்சி.
கரூர் சுற்றுவட்டார பகுதியில் திடீர் மழை. பொதுமக்கள் மகிழ்ச்சி. மத்திய மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதே போல மியான்மார் கரைக்கு அப்பால், வங்க கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இந்த இரு சுழற்சிகளின் தாக்கத்தால் மத்திய மற்றும் மேற்கு வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் எனவும், இதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்தது. கரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கோடை வெயில் போல 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர் இதனிடையே இன்று வானில் திடீரென கூடிய கருமேகங்கள் மழையாக பொழிந்தது. கரூர் நகர சுற்றுவட்டார பகுதியில் லேசாக துவங்கி இந்த மழை சற்று தற்போது வலுத்து வருகிறது. இதனால், வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்ட பொதுமக்கள், தற்போது பெய்து வரும் மழையால் குளிர்ந்த நிலை காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story