பல்லடத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை

பல்லடத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை
விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா வாலிபர் கைது
பல்லடம் பகுதிகளில் சட்ட விரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் குட்கா விற்பனை குறித்து ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். இதில் பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் டீ கடை நடத்தி வரும் ஒடிசா‌ மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் சந்திர பஹாரா என்பவர் சட்ட விரோதமாக குட்கா விற்பனை ஈடுபட்டு வருவது தெரிய வந்தது இதனையடுத்து பல்லடம் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையில் ரமேஷ் சந்திர பஹாரா டீ கடை மற்றும் அவர் வசிக்கும் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் ரமேஷ் சந்திர பஹாரா விற்பனைக்காக 40கிலோ குட்கா மற்றும் பான்மசாலா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த குட்கா மற்றும் பான்மசாலா பறிமுதல் செய்த போலீசார் ரமேஷ் சந்திர பஹாராவை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சட்ட விரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட வந்த ஒடிசாவை சேர்ந்த வாலிபர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story