ஓட்டல், தாபா, தள்ளுவண்டி கடைகளில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
Komarapalayam King 24x7 |23 Sep 2024 2:45 PM GMT
குமாரபாளையத்தில் ஓட்டல், தாபா, தள்ளுவண்டி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஓட்டல், தாபா, தள்ளுவண்டி கடைகளில் சுகாதாரம் இல்லாத உணவு வகைகள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்ததின் பேரில், மாவட்ட கலெக்டர் உத்திரவின் பேரில், நேற்று இரவு திடீரென்று உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரங்கநாதன் லோகநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் குமாரபாளையம் பகுதிகளில் உள்ள உணவகம், சில்லி சிக்கன் கடைகள், மீன் சில்லி கடைகள், தாபா மற்றும் பேக்கரிகளில் ஆய்வு மேற்கொண்டனர் அதில் பழைய கெட்டுப்போன சிக்கன் வகைகள் மற்றும் சாயம் ஏற்றப்பட்ட மீன் மற்றும் சில்லி வகைகள் 20 கிலோ கைப்பற்றி பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் தள்ளுவண்டி கடைகளுக்கு சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்க அறிவுரை வழங்கப்பட்டது. ஒரு முறை பயன்படுத்தி எண்ணெயை மறுமுறை பயன்படுத்தக்கூடாது என்றும், போலார் மீட்டர் மெஷின் கொண்டு எண்ணையின் தரம் பரிசோதிக்கப்பட்டு தரமற்ற எண்ணெய் கொட்டி அளிக்கப்பட்டது. ஆய்வில் தரமற்ற உணவகத்திற்கு முன்னேற்ற அறிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு 15,000 அபதாரம் விதிக்கப்பட்டது. மேலும் மாவட்ட நியமன அலுவலர் கூறியதாவது: இது போல் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அசைவ உணவகங்களில் பழைய சமைத்த உணவு வகைகளை குளிர்ப்பதன பெட்டியில் வைக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story