ஆரணியில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி.

ஆரணியில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி.
ஆரணி, செப் 23. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆரணி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழச்சியில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடியில் சொட்டு நீர் பாசனம் அமைத்தல், கரும்பு நாற்று உற்பத்தி தொழில்நுட்பங்கள், கரும்பு இயந்திர அறுவடை, மானிய விவரங்கள் மற்றும் பல்வேறு துறை திட்டங்கள் குறித்து கூறப்பட்டது. இப்பயிற்சியில் ஆரணி வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பா, வேளாண்மை அலுவலர் பவித்ராதேவி, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர் சேகர், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகுமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் சரவணன், வேலூர், செய்யார் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் உதவி கரும்பு அலுவலர்கள் செல்வி, மணிகண்டன், சுவாதி மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Next Story