பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்
நயினார் நாகேந்திரன் பங்கேற்பு
பாஜக மாநில துணைத்தலைவரும், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் விருத்தாசலத்தில் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பின் இடையே கூறியதாவது:- ஜாதி மதத்தை உருவாக்குவதே திமுக தான். நான் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் போது ஜாதி மதத்தைப் பற்றி பேசியவர் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தான். இப்படி இவர்கள் பேசிவிட்டு ஒரு பொய்யை திரும்ப திரும்ப பேசினால் உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இன்று நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி அதை உண்மையாக்குவது, தமிழ்நாட்டில் சொத்து வரி பிரச்சனை மின்சார கட்டணம் உயர்வு இதையெல்லாம் மக்கள் மறந்ததால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம், என்ற எண்ணத்தில் அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இது தொடராது நான் மதிக்கின்ற தலைவர்களில் ஒருவர் திருமாவளவன் அவர்கள் மது ஒழிப்பு மாநாட்டை நடத்துகிறார். திமுக அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மது ஆலைகளை கையில் வைத்திருக்கிறார்கள். அந்த கம்பெனியை அவர்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டு நாங்கள் மதுவை ஒழிப்போம் என்றால் எப்படி நம்புவது. அந்த மது ஒழிப்பு மாநாடு தேவையே இல்லை. விருத்தாசலத்தை தலைமை இடமாகக் கொண்டு மாவட்ட மாக்க வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கை எனது குரலாக சட்டமன்றத்தில் ஒலிக்கும். மு க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால் பாராளுமன்ற தேர்தல் வரும் வரை யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் வருகிறது என தெரிந்து உடன் இந்த ஆயிரம் ரூபாயை கொடுத்து பொதுமக்களை ஏமாற்றி விட்டார்கள். இது ஒரு ஏமாற்று வேலை தான். இந்த ஆயிரம் ரூபாய் எத்தனை நாட்களுக்கு கொடுப்பார்கள் என தெரியாது. முதலில் குடும்ப பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் என்றார்கள். இப்பொழுது தகுதி உள்ள பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் என்கிறார்கள். யார் தகுதியுள்ள பெண்கள், யார் தகுதியற்ற குடும்ப பெண்கள் என முதலமைச்சர் தான் விளக்கி கூற வேண்டும். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகுவது என்பது அது அவருடைய உட்கட்சி பிரச்சனை. துணை முதலமைச்சர் ஆனால் நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும். திருப்பதி லட்டு பிரச்சனையை கேள்விப்பட்டதும் அனைவருக்குமே மன வேதனையையும் சங்கடத்தையும் கொடுத்துள்ளது. ஆன்மீக மக்கள் ரத்த கண்ணீர் வடிக்கும் அளவிற்கு உள்ளது. இது உண்மையாக இருந்தால் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story