கருவேப்பிலங்குறிச்சி அருகே சாத்துக்குடல் அய்யனார் கோவில் அறங்காவலர் குழு நியமனம்
Virudhachalam King 24x7 |23 Sep 2024 5:30 PM GMT
அறங்காவலராக செந்தில்நாதன் தேர்வு
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சாத்துக்குடல் கிராமத்தில் அய்யனார் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள இக்கோவில்கள் கடந்த 50 ஆண்டுகளாக அறங்காவலர் குழு நியமிக்கப்படாமல் கிராம பொது மக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்து சமய அறநிலைய துறை கோயில்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக அரசு அறங்காவலர்களை நியமிக்க உத்தரவிட்டதன் அடிப்படையில் அறங்காவலர்கள் குழு நியமனம் செய்யும் நிகழ்ச்சி சாத்துக்குடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை விருத்தாசலம் ஆய்வர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன், திமுக ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கனக கோவிந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன், ஒன்றிய துணைச் செயலாளர் தர்ம மணிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து அய்யனார் கோவில் அறங்காவலர்களாக செந்தில்நாதன், ஞானபிரகாசம் மற்றும் மாரியம்மன் கோவில் அறங்காவலராக ஜெயபால் ஆகியோர்கள் நியமிக்கப்பட்டு அதற்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சித்ரா அமிர்தலிங்கம், சக்திவேல் மாவட்ட கவுன்சிலர் சாமி, முன்னாள் ஒன்றிய சேர்மன் செல்லதுரை, இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கிளைச் செயலாளர் அருள்மொழி, சிவகுமார், ராஜேந்திரன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story