விருத்தாசலம் டிஎஸ்பி அலுவலகத்தில் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் புகார் மனு

X
பாஜக பொறுப்பு குழு தலைவா் எச்.ராஜா மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குறித்தும், அவரின் அமெரிக்க சுற்றுப் பயணம் குறித்தும் விமர்சனம் செய்ததை கண்டித்து தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு அளித்து வருகின்றனர். அதன்படி விருத்தாசலம் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி கிரியா சக்தியை விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் சந்தித்து புகார் மனு அளித்தார். அதில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை அவதூறாக பேசிய தமிழக பாஜக பொறுப்பாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து மனுவை பெற்றுக் கொண்ட டிஎஸ்பி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அவர்கள் மனு அளித்து விட்டு சென்றனர். இதில் காங்கிரஸ் கட்சி விருத்தாசலம் நகரத் தலைவர் ரஞ்சித்குமார், விருத்தாசலம் வடக்கு வட்டார தலைவர் ராவணன், கம்மாபுரம் வட்டாரத் தலைவர் சாந்தகுமார், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி லாவண்யா, விவசாயி பிரிவு மாவட்ட தலைவர் ஜெய குரு, சிராஜுதின், ஆனந்த், திருநாவுக்கரசு, ரகுபதி, வீராசாமி ராம்குமார், சரத் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story

