கருவேப்பிலங்குறிச்சி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் நகைகள் கொள்ளை

கருவேப்பிலங்குறிச்சி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் நகைகள் கொள்ளை
போலீசார் தீவிர விசாரணை
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள பேரளையூர் கிராமத்தில் பொண்ணு முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பேரளையூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள் இந்த பொண்ணு முத்து மாரியம்மனை வணங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் கோவிலின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு பக்கத்தில் குடியிருக்கும் பெரியசாமி என்பவர் எழுந்து வந்து பார்த்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மூன்று பேர் கோவிலின் உண்டியலை உடைத்துக் கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர்களை தடுக்க முயற்சித்த போது அவர்கள் கீழே கிடந்த கல்லை எடுத்து பெரியசாமியை தாக்கி விட்டு தப்பி ஓடி தலைமுறை வாகி விட்டனர் . தொடர்ந்து பெரியசாமி கத்தி கூச்சல் போட்டதையடுத்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை பிடிக்க முயற்சித்தும் முடியவில்லை. தொடர்ந்து உண்டியலில் வந்து பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து காணிக்கை பணம் முழுவதும் திருடு போயிருந்தது தெரியவந்தது. மேலும் கோவிலில் சாமிக்காக சாத்தப்படும் தங்க நகைகள் அனைத்தும் பாதுகாப்பாக உண்டியலுக்குள் வைத்திருந்ததாகவும் அந்த நகைகளும் உண்டியலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று நேரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடலூரில் இருந்து தடையியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. நள்ளிரவில் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட இந்த சம்பவம் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story