கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி
கணவன் மரணம்
நெல்லை அருகே உள்ள பக்கிட்மாநகரில் உள்ள எம்ஜிஆர் நகரைச் சார்ந்தவர் சிவன் பெருமாள்(40). கூலி தொழிலாளியான இவருக்கும் இவரது மனைவி செல்வி (34)என்பவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மீண்டும் தகராறு வந்த நிலையில் ஆத்திரத்தில் அடுப்பில் கொதிக்க வைத்திருந்த எண்ணெயை அவர் மீது ஊற்றி உள்ளார். இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இது பற்றி தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Next Story