உடுமலை அருகே மலை கிராமத்தில் தேசிய ஊட்டச்சத்து வார விழிப்புணர்வு விழா
Udumalaipettai King 24x7 |24 Sep 2024 6:13 AM GMT
குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டத்திற்க்கு உட்பட்ட மாவடப்பு மலை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு விழா ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டபணிகள் துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடைபெற்றது. விழாவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ச. தீபா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். விழாவில் கண்காட்சி அமைக்கப்பட்டு இரும்பு சத்து உணவுகளை உண்ண வேண்டும் மற்றும் வீட்டு தோட்டம் அமைத்து அதன் மூலம் வரும் இயற்கையான ஆரோக்கியமான காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும் என மலை கிராம மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. சிற்றுண்டி மற்றும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. எண்ணம் போல் வாழ்கை அறக்கட்டளை மற்றும் பேபி கிட்ஸ் சார்பாக அங்கன்வாடி குழந்தைகளுக்கு புத்தாடைகள் நிறுவனர் எஸ் ஏ ஐ நெல்சன் வழங்கினார்.இவ்விழாவில் உறுப்பினர் சிவலிங்கம், மேற்பார்வையாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story