மருத்துவமனையின் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்!

மருத்துவமனையின் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பெரும் தொற்றுள்ள கழிவு நீர் வடிகாலில் கலக்கப்படுவதால் தோற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக சமூக ஆர்வலர் மா.ரா.விஜயன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெளியேற்றப்படுகிற பெரும் தொற்றுள்ள கழிவு நீரை பொது நீர் வடிகாலில் விட்டு வருகிறார்கள். இது மக்களுக்கு பெரும் தொற்று ஏற்படுத்தக்கூடியது. இது குறித்து 10.07.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்ப்பு நாளில் மனு அளித்து அதற்கென்று தனி வேலி அமைத்து தண்ணீரை விடுவது குறித்து மனு அளித்திருந்தோம். இதுவரை பொது கழிவுநீர் வடிகாலிலே சென்று வருகிறது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கழிவுநீர் செல்கிற வடிகால் பாதையிலிருந்து நோய் தொற்று ஏற்பட்டு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இது குறித்து அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் இது குறித்து ஒரு விளக்கக் கடிதம் 09.08.2023 அன்று வந்தது. கடிதத்தில் வந்த தகவல் எதுவும் திருப்தி இல்லாத நிலையில் மீண்டும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரை மீண்டும் சந்தித்து பேசினேன். அப்பொழுது இந்த திட்டப் பணிக்கான முழுத் தொகையையும் பொதுப்பணித் துறை வசம் ஒப்படைத்துவிட்டதாக வாய்மொழியாக எனக்கு பதில் தந்தார். நான் மீண்டும் பொதுப்பணித் துறையினுடைய தலைமைப் பொறியாளரை சந்தித்துப் பேசினேன். செய்து தருவதாக வாய்மொழி உத்தரவு தருகிறார்கள். ஆனால் இதுவரை செய்யவில்லை. இதன் மீது தனி அக்கறை பெரும் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித் துறையினுடைய வேலைகள் எங்கு நடந்தாலும் திட்ட மதிப்பீட்டு பதாகை வைப்பதில்லை. வேலை நடைபெறுகின்ற இடத்திற்கு சென்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருப்பதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு தொடர்பு கொண்டால் காரணங்களை சொல்லி தட்டிக் கழிக்கிறார்கள். அரசு மருத்துவமனையில் மழை வெள்ளத்திற்கு பிறகு நடைபெற்ற பணிகளில் தரமற்றதாக இருக்கிறது. அநேக இடங்களில் கழிவுநீர் பைப்பிலிருந்து தண்ணீர் பைப் வழியாக போகாமல் ஒழுகி கொண்டிருந்தது. வேலை முடிந்தது பின்பும் அதே தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. மருத்துவமனையின் ஒருபகுதி பெயிண்டிங் செய்யப்பட்டிருக்கிறது. அதை பார்த்தாலே தரமற்ற முறையில் வேலை செய்திருக்கிறது என்று தெரியவருகிறது. நடைபெறுகிற வேலைகள் தரமற்று இருப்பதால் மாவட்ட ஆட்சியர் மருத்துவமனையினை நேரடியாக ஆய்வு செய்து PWD அலுவலகத்தில் பணியில் இருக்கின்ற அனைவரையும் கூண்டோடு சில மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story