பைக் டாக்ஸியை ரத்து செய்யவும் மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்து ஆட்டோ செயலியை அரசே உருவாக்க வேண்டும்

* * பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆட்டோ தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை முன்பு மதுரை நகர் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் ஸ்மார்ட் பைன் அபதாரத்தை நிறுத்து - தமிழகத்திற்கு விதிவிலக்கு வழங்கு ,சட்ட விரோதமாக இயக்கப் போகும் பைக் டாக்சியை கருத்து நிறுத்தவும் மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்து ஆட்டோ செயலியை அரசே உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் கண்டன கோஷங்களை எழுப்பிய படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தலைவர் தேவராஜ் பொதுச் செயலாளர் கனகவேல் பொருளாளர் அறிவழகன் உட்பட ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

