தொழிற்சங்கங்கள் கருப்பு பேஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்!
Thoothukudi King 24x7 |24 Sep 2024 9:23 AM GMT
தொழிலாளா் விரோத சட்டங்களை இயற்றிய மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் அனைத்து தொழிலாளர்களின் சார்பில் கருப்பு பேஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொழிலாளி வர்க்கம் பல தலைமுறைகாலமாக போராடி பெற்ற தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் வகையிலும், ஜனநாயக விரோதமான முறையில் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றிய 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை அமலாக்கும் முயற்சிகளை கைவிட வலியுறுத்தி செப்டம்பர் 23 அன்று நாடு முழுவதும் கருப்பு தினமாக அனுசரிக்க மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட அனைத்து பகுதி தொழிலாளர்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து, தூத்துக்குடி மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்பு பேஜ் அணிந்து தூத்துக்குடி அண்ணாநகர் 7-வது தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தொழிற்சங்க மாவட்ட தலைவர் சுசி ரவீந்திரன் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய ஐ.என்.டி. யூ.சி அமைப்புச் செயலாளர் பி கதிர்வேல் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து ஏஐடியுசி மாவட்ட செயலாளர் கிருஷ்ண ராஜ் ஹெச்எம்எஸ் பொது செயலாளர் துறைமுகம் சத்யநாராயணன், ஏஐசிசியு மாவட்ட செயலாளர் சிவராமன், ஹெச்எம்எஸ்எம்எஸ் உழைப்பாளர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜ் குமார், டாக்டர் ராஜலக்ஷ்மி ராஜ்குமார் ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் ராஜகோபாலன், மாவட்ட செயலாளர் பால ராஜ், நிர்வாகிகள் ஸ்டீபன், கருப்பசாமி, மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் நிர்வாகிகள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story