ஒட்டன்சத்திரத்தில் விலை குறைந்த தக்காளி

ஒட்டன்சத்திரத்தில் விலை குறைந்த தக்காளி
ஒட்டன்சத்திரத்தில் விலை குறைந்த தக்காளி
வெளிமாநில வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் அதிகரித்திருந்த தக்காளி விலை குறைந்து கிலோ ரூ.36க்கு விற்பனை ஆனது.ஒட்டன்சத்திரம், சாலைப்புதுார், காவேரியம்மாபட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், அப்பியம்பட்டி, நால்ரோடு, கூத்தம்பூண்டி, பொருளூர், பாலப்பன்பட்டி, அரசப்பிள்ளைபட்டி, தங்கச்சியம்மாபட்டி சுற்றியுள்ள பகுதிகளில் தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது. தற்போது பல பகுதிகளில் அறுவடை மும்முரம் அடைந்துள்ளதால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்தது. ஆந்திரா,கர்நாடகாவில் பெய்த தொடர் மழை காரணமாக தக்காளி செடிகள் அழிந்தன. இதனால் அந்த மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளியை கொள்முதல் செய்கின்றனர். கடந்த வெள்ளி அன்று கிலோ ரூ.54 க்கு விற்றது. நேற்று வெளிமாநில வியாபாரிகள் யாரும் தக்காளி வாங்க வரவில்லை. இதனால் அதிகரித்திருந்த தக்காளி விலை குறைந்து கிலோ ரூ.36 க்கு விற்றது.ஒட்டன்சத்திரம் கமிஷன் கடை உரிமையாளர் முருகேசன் கூறியதாவது, தமிழகத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் தக்காளிச் செடிகள் அழிகின்றன. இதன் காரணமாக இனி வரும் நாட்களில் தக்காளி வரத்து குறைந்து போக வாய்ப்புள்ளது. இதனை ஒட்டி தக்காளி விலை இன்னும் அதிகரிக்கும் என்றார்.
Next Story