திருப்பூர் பேருந்து நிலையத்தில் ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் தனியார் மற்றும் மினி பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல்!

திருப்பூர் பேருந்து நிலையத்தில் ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் தனியார் மற்றும் மினி பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் பேருந்து நிலையத்தில் ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் தனியார் மற்றும் மினி பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஒலி மாசுவை ஏற்படுத்தும் வகையில் பேருந்துகள் ஏர் ஹாரன் வகை ஒலிப்பான்களை பயன்படுத்துவதால் சாலையில் செல்லும் பயணிகள் அச்சமடைய வேண்டிய நிலை இருப்பதாகவும் விபத்துக்கள் ஏற்படும் அபாயகரமான நிலை நீடிப்பதாக திருப்பூர் வட்டார போக்குவரத்து துறைக்கு கிடைத்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர் இணைந்து பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பான்களை சோதனை செய்தனர் அப்போது தனியார் பேருந்து மற்றும் மினி பேருந்துகளில் முறைகேடாக ஒலிப்பான்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து 10 பேருந்துகளில் இருந்து ஏர் ஹாரன் வகை ஒலிப்பான்களை பறிமுதல் செய்தனர். மேலும் இத்தகைய ஒலிப்பான்களை பயன்படுத்திய வாகனங்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். Sent from my iPhone
Next Story