பெரியகுளம் கீழவடகரை ஊராட்சியை பெரியகுளம் நகராட்சி பகுதியில் இணைப்பதற்கு பெண்கள் எதிர்ப்பு
Periyakulam King 24x7 |24 Sep 2024 11:49 AM GMT
எதிர்ப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை ஊராட்சியை பெரியகுளம் நகராட்சி பகுதியில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம். தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியை ஒட்டி உள்ளது கீழவடகரை ஊராட்சி கடந்த ஆண்டு பெரியகுளம் நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சி விரிவாக்கத் திட்டத்தின் கீழ் தாமரைக்குளம் பேரூராட்சி, தென்கரை பேரூராட்சி, வடுகபட்டி பேரூராட்சி மற்றும் கீழவடகரை ஊராட்சி, ஆகிய பேரூராட்சி மற்றும் ஊராட்சியை பெரியகுளம் நகராட்சி பகுதிகளை இணைத்து பெரியகுளம் நகராட்சியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் கீழவடகரை ஊராட்சியை நகராட்சி பகுதியோடு இணைத்தால், வீட்டு வரி, மற்றும் குடிநீர் வரி உயரும் நிலையில், 100 நாள், வேலை திட்டமும் பறிபோகும் சூழ்நிலை உருவாகும் என்பதால், இன்று கீழவடகரை ஊராட்சி பகுதி பெண்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு கீழவடகரை ஊராட்சியை பெரியகுளம் நகராட்சியோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு வந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் , ஊராட்சி மன்ற செயலர் மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கை விட்டு களைந்து சென்றனர்.
Next Story