தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் பிறந்த நாள் விழா -நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் சிலம்பொலியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் பிறந்த நாள் விழா -நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் சிலம்பொலியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
தமிழ் மொழி மீது அதிக பற்று கொண்டிருந்த இவருக்கு கடந்த 1953-ஆம் ஆண்டில் ‘சிலம்பொலி’ என்ற பட்டத்தை சொல்லின் செல்வா் என அழைக்கப்படும் இரா.பி.சேதுப்பிள்ளை வழங்கினாா்
மறைந்த தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சு.செல்லப்பன். தமிழ் மொழி மீது அதிக பற்று கொண்டிருந்த இவருக்கு கடந்த 1953-ஆம் ஆண்டில் ‘சிலம்பொலி’ என்ற பட்டத்தை சொல்லின் செல்வா் என அழைக்கப்படும் இரா.பி.சேதுப்பிள்ளை வழங்கினாா்.உலக தமிழ் மாநாட்டுக்கு சிறப்பு மலா் தயாரித்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வு அணிந்துரைகளை எழுதி தமிழுக்கு பெரும் பங்காற்றிய சிலம்பொலியாா் 2019, ஏப்ரல்6-ஆம் தேதி 91-ஆவது வயதில் காலமானாா்.ஒவ்வோா் ஆண்டும் செப்டம்பர் 24 அவருடைய பிறந்த தினமாகும். அதன்படி, சிலம்பொலி சு.செல்லப்பன் 96-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள "சிலம்பொலி செல்லப்பன் அறிவகத்தில்" அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிலம்பொலியாா் முழுவுருவச் சிலைக்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் V.S.மாதேஸ்வரன் எம்பி,
சிலம்பொலியார் மகள்கள் மணிமேகலைபுஷ்பராஜ்,கௌதமி ராமலிங்கம்,மகன் கொங்குவேள், மருமகள் ஈஸ்வரி,காவேரி பீட்ஸ் வெங்கடாஜலம், லெனின்,பூங்கோதை செல்லத்துரை,பேரன்கள் தமிழன் ராகுல்காந்தி, அகிலா, ஆதினி, கண்ணன்,செல்வராஜ் ,
கொமதேக மாநில செயற்குழு உறுப்பினர் துரை, ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் மாவட்ட பொருளாளர் மணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் செந்தில் ராஜா, சீனிவாசன், மாவட்ட ஐடி அணி செயலாளர் மனோஜ், நாமக்கல் ஒன்றிய செயலாளர் சசிகுமார், கொல்லிமலை ஒன்றிய செயலாளர் பிரகாஷ், சேந்தமங்கலம் ஒன்றிய இணை செயலாளர் சிவக்குமார் மற்றும் தமிழறிஞா்கள், பல்வேறு அரசியல் கட்சியினா், குடும்பத்தினா், உறவினா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.
Next Story