பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை.

X
Paramathi Velur King 24x7 |24 Sept 2024 7:47 PM ISTபெற்றோர் கண்டிந்ததால் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை.
பரமத்திவேலூர், செப்.24- திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, பகுதியை சேர்ந்தவர் செல்வம்(40). இவரது மனைவி செல்வி(36).இவர்களுக்கு பவித்ரா, பூவிதா என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். இவர்கள் குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள வெள்ளத்தாரை பகுதியில் உள்ள ஒரு வெல்லம் தயாரிக்கும் ஆலைகொட்டைகையில் தங்கி கூலிவேலை செய்து வருகிறனர். இவரது மகள் பவித்ரா (16). இவர் பிலிக்கல்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை பவித்ராவின் தந்தை செல்வம் செல்போனை பார்த்து கொண்டே இருக்காதே என கூறிவிட்டு அருகில் உள்ள டீ கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த போது பவித்ரா வீட்டில் உள்ள விட்டத்தில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பவித்ரா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் மாணவி பவித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
