ஒருவழிப் பாதையில்எதிர் திசையில் அரசு பஸ் செல்வதால் வாகன ஓட்டிகள் அவதி
Komarapalayam King 24x7 |24 Sep 2024 2:29 PM GMT
குமாரபாளையம் அருகே ஒருவழிப் பாதையில் எதிர் திசையில் அரசு பஸ் செல்வதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஒருவழிப் பாதையில் எதிர் திசையில் அரசு பஸ் செல்வதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. சேலம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் கொங்கு மண்டபம் அருகே சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்படுகிறது. கோவை, திருப்பூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஒருவழிப்பாதையில் செல்கின்றன. குமாரபாளையம் செல்லும் ஒரு சில அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஒருவழிப்பாதையில் எதிர் திசையில் செல்வதால், அவ்வழியாக வந்து கொண்டிருக்கும் அனைத்து பஸ்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள், டூவீலர்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருவதுடன், மிகவும் அச்சத்துடன் வரும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இது போல் விதிமீறி செல்லும் அரசு மற்றும் தனியார் வாகன ஓட்டுனர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, வாகன ஓட்டுகளின் அச்சத்தை போக்குவதுடன், விபத்து அபாயத்தை தடுக்க வேண்டும்.
Next Story