தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தொடர்ச்சியாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட நீக்கம் இடம் மாறுதல் செய்யப்படுவதை கண்டித்து இன்று பள்ளியில் கருப்பு பட்டை அணிந்து பணி செய்து, அதைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் தாமரைச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் தங்கமணி கண்டன உரை மாநில துணைத்தலைவர் இளவரசு, மேனாள் மாவட்ட தலைவர் அடைக்கண் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொருளாளர் பழனிவேல் நன்றியுரை வழங்கினார். மேலும் இதுகுறித்து மாநில தலைவர் தங்கமணி பேசும்போது கடந்த பல வருடங்களாக தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தேவையான அடிப்படை பணியாளர்கள் அமைச்சுப் பணியாளர்கள் இல்லாமல் கல்விப் பணிவுடன் சேர்த்து பல்வேறு நலத்திட்ட பணிகளை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் சூழலில் கடந்த ஓராண்டாக தமிழக முழுவதும் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை பணியிட நீக்கம் பணியிட மாறுதல் செய்யப்பட்டது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நீங்க மன வருத்தத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.
Next Story