விருத்தாசலத்தில் போலி உரம் உற்பத்தி செய்யப்படுகிறதா?

விருத்தாசலத்தில் போலி உரம் உற்பத்தி செய்யப்படுகிறதா?
வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு
விருத்தாசலம் வட்டாரத்தில் போலி உரத் தொழிற்சாலை அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தரமற்ற போலி உரம் விநியோகம் செய்யப்படுவதாகவும், உடனடியாக கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்பு கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் விவசாயிகள் அவ்வப்போது வேளாண் துறை அதிகாரிகளை சந்தித்தும் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த புகார் குறித்து விருத்தாச்சலம் வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார், வேளாண் அலுவலர் சுகன்யா மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று பெரியவடவாடி பகுதியில் அமைந்துள்ள 2 தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு உரம் ஏதேனும் தயாரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் கூறிய போது தொடர்ந்து புகார் வந்ததால் ஆய்வு செய்தோம். தரமற்ற உரங்கள் எதுவும் உற்பத்தியோ விற்பனையோ செய்யப்படவில்லை. இதுபோல தரமற்ற உரங்கள் தயாரிக்கப்படுவதாகவோ அல்லது விற்பனை செய்யப்படுவதாகவோ அறிந்தால் விவசாயிகள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு தரமற்ற உரங்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
Next Story