விருத்தாசலம் நாச்சியார்குளத்தில் நடைமேடை அமைக்கும் பணி

X
விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு வடக்கு பெரியார் நகரில் உள்ள நாச்சியார்குளத்தில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 26 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்பாட்டு பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விருத்தாசலம் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சுமார் 26 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைபெறுகின்ற இப்பணியில் நாச்சியார் குளத்தை சுற்றியுள்ள பகுதியில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக நடைமேடை அமைப்பது, ஓய்வு நேரங்களில் அமர்வதற்கான சிமெண்ட் இருக்கைகள் மற்றும் குளத்தை சுற்றி மின்விளக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட பணிகள் அமைய உள்ளது. இதில் 18 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தங்க அன்பழகன், மற்றும் நகர மன்ற உறுப்பினர் பாண்டியன் மற்றும் நகராட்சியினர் பலர் உடன் இருந்தனர்.
Next Story

