பரிவளாகம் கிராமத்தில் நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த வெளிவளாக பயிற்சி
Virudhachalam King 24x7 |24 Sep 2024 6:02 PM GMT
வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்பு
நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த வெளி வளாக பயிற்சி குமராட்சி வட்டாரம் பரிவிளாகம் கிராமத்தில் நடைப்பெற்றது. விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் கலந்துகொண்டு, வேளாண்மை அறிவியல் நிலையத்தின் முக்கிய குறிக்கோள்கள் மற்றும் அதிக மகசூல் தரும் உயர்தர இரகங்கள், விதை உற்பத்தி செய்யும் முறைகள், நெல்லில் காணப்படும் பூச்சி நோய் தாக்குதல் அதன் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தார். இணை பேராசிரியர் பாரதி குமார் கலந்துகொண்டு ஒருங்கிணைந்த பயிர் பராமரிப்பு மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளித்தார். தொடர்ந்து தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இணையத்தள செயலிகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ரங்கநாயகி செய்திருந்தார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
Next Story