கொல்லிருப்பு ஊராட்சியில் ரேஷன் கடை திறப்பு விழா
Virudhachalam King 24x7 |24 Sep 2024 6:05 PM GMT
எம் எல் ஏ ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் கொள்ளிருப்பு ஊராட்சி கைகலர் குப்பம் கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 9.80 லட்சம் மதிப்பில் நியாய விலை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகித்து தொடங்கி வைத்தார். அப்போது கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், சங்கர், திமுக ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், காங்கிரஸ் கட்சி கம்மாபுரம் வட்டார தலைவர் சாந்தகுமார், சிராஜுதீன், ரகுபதி, ஆனந்த், ஊராட்சி துணைத் தலைவர் சின்னத்துரை, திமுக நிர்வாகிகள் மகாலிங்கம், ரங்கநாதன், அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கம்மாபுரம் ஒன்றியம் நடியப்பட்டு ஊராட்சியில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், விருத்தாசலம் காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ரஞ்சித் குமார், ஒப்பந்ததாரர் குழந்தைவேல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story