கடமலைக்குண்டில் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை
Andippatti King 24x7 |25 Sep 2024 2:32 AM GMT
30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு கிராமத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சாலைகளில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித் திரிவது அதிகரித்துள்ளது.இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தனியாக வெளியே செல்வதற்கு அஞ்சுகிறார்கள். இரவு, அதிகாலை நேரங்களில் வேலைக்கு செல்லும், வேலை முடித்து வீடுகளுக்கு திரும்பும் பெண்கள், முதியவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அந்தப் பகுதியில் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் நாய்கள் தெருவிலேயே சண்டையிட்டு, சாலையில் வரும் வாகனங்கள் முன் பாய்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இரவு நேரங்களில் நாய்கள் சாலையிலேயே படுத்துக் கொள்கின்றன. ஆனால் நாய்கள் படுத்திருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அவற்றின் மீது ஏற்றியும், அவசரமாக பிரேக் பிடித்தும் நிலைதடுமாறி விழுகின்றனர். எனவே தெருநாய்களை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம்அதிகமாக தெருநாய்கள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்
Next Story