நாமக்கல்: கருப்பு பேட்ஜ் அணிந்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்!

X
Namakkal King 24x7 |25 Sept 2024 10:35 AM ISTகாரணமின்றி பணியிடை நீக்கம் செய்வதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்லில் பணியிடை நீக்கம் செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தலைமை ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழகத்தின் நாமக்கல் கிளை சாா்பில்,மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து தலைமை ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.மாவட்ட துணைத் தலைவா் ந.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில், சிறிய பிரச்னைகளை காரணமாகக் கொண்டு, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களை பணியிடை நீக்கம் செய்வது, இடமாறுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.இந்த ஆா்ப்பாட்டத்தில், தலைமை ஆசிரியா்கள், உதவி தலைமை ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
Next Story
