திருமயம் பகுதிகளில் நாளை மின்தடை!
Pudukkottai King 24x7 |25 Sep 2024 5:09 AM GMT
மின் நிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் வியாழக்கிழமை (செப்.26) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ச. கீதாஞ்சலி தெரிவித்துள்ளார். திருமயம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (செப். 26) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. ஆகவே, திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம், கன்னங்காரைக்குடி, ஊனையூர், சவேரியார்புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூர், கோனாப்பட்டு, துளையானூர், தேத்தாம்பட்டி, ஆதனூர், வாரியப்பட்டி, கொல்லக்காட்டுப்பட்டி, ராங்கி கண்ணனூர், மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, வி. லெட்சுமிபுரம், ஏனப்பட்டி, விராச்சிலை, பெல் வளாகம் ஆகிய பகுதிகளில் காலை மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
Next Story