நாமக்கல்லில் நாளை கல்விக்கடன் முகாம்: மாவட்ட ஆட்சியர் உமா தகவல்

நாமக்கல்லில் நாளை கல்விக்கடன் முகாம்: மாவட்ட ஆட்சியர் உமா தகவல்
கல்வி கடனுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவ மணவியர் ஆதார், பான் கார்டு மற்றும் கல்வி தொடர்பான ஆவணங்களுடன் கலந்து கொண்டு தங்கள் விண்ணப்பங்களை www.vidyalakshmi.com என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
நாமக்கல்லில் நாளை வியாழக்கிழமை செப்டம்பர் 26ம் தேதி நடைபெறும், சிறப்பு கல்விக்கடன் முகாமில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு கடன் உதவி பெறலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும், கல்விக் கடன் முகாம் அனைத்து வங்கிகளின் சார்பில், நாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு, நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், எர்ணாபுரத்தில் உள்ள CMS பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.இந்த முகாமில், ஏற்கனவே நாமக்கல் மற்றும் வெளியூர்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் பெறப்பட்ட கல்விக்கடன் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் உத்தரவு வழங்கப்படுகிறது. மேலும் முகாமில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் புதிதாக கல்விக்கடன் பெற விண்ணப்பங்கள் வெப்சைட்டில் பதிவேற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கல்வி கடனுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவ மணவியர் ஆதார், பான் கார்டு மற்றும் கல்வி தொடர்பான ஆவணங்களுடன் கலந்து கொண்டு தங்கள் விண்ணப்பங்களை www.vidyalakshmi.com என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பான் கார்டு இல்லாத மாணவர்கள் ஆதார் நகல் மற்றும் 2 போட்டோ எடுத்து வந்தால், முகாம் நடைபெறும் இடத்திலேயே இ -சேவை மையம் மூலமாக பான் கார்டுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். புதிய சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதி, கடன் தொடர்பான வங்கி உதவி மைய சேவை வசதிகளும் இந்த முகாமில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இம்முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து உடனடியாக கல்வி கடன் அனுமதி வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு 9486349282 என்ற செல்போன் நம்பர் அல்லது, நாமக்கல், சேந்தமங்கலம் ரோட்டில் உள்ள மாவட்ட முன்னோடி வங்கியான, இந்தியன் வங்கி கிளையை நேரில் அனுகி பயன் பெறலாம்.நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
Next Story