காவல் நிலையத்தில் ராகுல் காந்தி மீது பாஜக நிர்வாகிகள் புகார்!
Thoothukudi King 24x7 |25 Sep 2024 6:06 AM GMT
இடஒதுக்கீடு ரத்து குறித்து பேசியதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது தூத்துக்குடி காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர்.
இடஒதுக்கீடு ரத்து குறித்து பேசியதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது தூத்துக்குடி காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் அளித்துள்ள புகார் மனுவில், "காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி 11-09-2024 அன்று அமெரிக்காவிலுள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பேசும்போது காங்கிரஸ் கட்சி இடஒதுக்கீட்டை ரத்துச் செய்வது பற்றி சிந்திக்கும் என்று அதிர்ச்சித் தரும் வகையில் பேசியிருக்கிறார்! OBC (BC & MBC), SC மற்றும் ST மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிரான ராகுல் காந்தியின் பேச்சு கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமுதாய மற்றும் பழங்குடி மக்களிடையே பேரச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது; எங்களின் மனதைப் புன்படுத்தியிருக்கிறது! மேலும், ராகுல்காந்தியின் பேச்சானது அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிக் கொடுத்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும், குறிப்பாக சமூக நீதிக்கும் எதிரானதாகும். ராகுல்காந்தி பேச்சு அடித்தட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது நம் சமுதாய அமைதியை சீர்குலைக்கும். எனவே, சமூக நீதி, இந்திய அரசியலமைப்புச் சட்டம், சமுதாய அமைதி, BC, MBC, SC மற்றும் ST மக்களின் நலன் ஆகியவற்றிற்கு எதிராகப் பேசியிருக்கும் ராகுல்காந்தி மீது வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட துனைதலைவர் சிவராமன் OBC அணி மாவட்டத லைவர் முருகேசன், கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ்கனி, மேற்கு மண்டல பொதுச்செயலாலர் சொக்கலிங்கம், மேற்கு மண்டல துனைதலைவர் லெட்சுமணன், பிரச்சார பிரிவு மாவட்ட செயலாலர் கனி, விருந்தோம்பல் பிரிவு மாநில செயலாலர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story