ஆபத்தான மின்கம்பங்களை மாற்ற வேண்டும் : ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை!

ஆபத்தான மின்கம்பங்களை மாற்ற வேண்டும் : ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை!
செந்தியம்பலம் கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செந்தியம்பலம் கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள செந்தியம்பலம் கிராமத்தில் ரைட்டர் விளை 2ம் தெருவில் உள்ள மின்கம்பம் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு சாய்ந்த நிலையிலும் கால்கள் அரித்து போய் உள்ளது. இந்த கம்பத்தில் இருந்து மேற்கு பகுதி கம்பத்திற்கு செல்லும் மின்வயர் தாழ்ந்து தரையில் இருந்து 7 அடி உயரத்தில் செல்கிறது. 4 சக்கர வாகனம் மற்றும் லாரி வேன் போன்றவை செல்லும் போது உரசும் நிலையில் உள்ளது.  மேலும் உயிர் பலி வாங்கும் சூழ்நிலையில் உள்ளது. மேலும் தெற்கு பகுதியில் உள்ள மின் கம்பம் செல்லும் வழியிலும் மின்வயர் தாழ்வாக செல்கிறது. மேற்கண்ட இரண்டு இடங்களிலும் கூடுதல் மின்கம்பம் அமைக்க வேண்டும். செந்தியம்பலம் புதுகோவில் தெரு வாதிரியார் இளைஞர் சங்கம் அருகிலும் மின் வயர் தாழ்வாக செல்லுகிறது அதிலும் கூடுதல் மின் கம்பம் அமைக்கவேண்டும். புதுக்கோவில் தெரு ராஜன் ஆசிரியர் வீட்டின் அருகில் கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது அதனையும் மாற்ற வேண்டும்.  கடந்த ஒரு வருடமாக பலமுறை மனு அளித்தும் மால் தெருவில் போப்காலேஜ் பின்புறம் கம்பம் இது வரை மாற்றப்படவில்லை. எனவே ஆபத்தான நிலையில் மின்கம்பங்களையும் மாற்றி, அரசு விதிப்படி தாழ்வான பகுதியில் கூடுதல் புதிய 3 மின்கம்பங்கள் அமைக்கப்பட வேண்டும். போர்கால அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து 6 கம்பங்களையும் அமைத்து தந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் சார்பில்  சேர்வைக்காரன்மடம் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா மற்றும் வார்டு உறுப்பினர் ஹேமா கோரிக்கை அளித்துள்ளனர்
Next Story