பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!
Thoothukudi King 24x7 |25 Sep 2024 6:24 AM GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை பிறந்து 15 ஆண்டுகளாக பிறப்பு சான்றிதழ் பெறாதவர்கள், வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குழந்தையின் பெயர் பதிவு செய்யப்பட்ட பிறப்புச்சான்றிதழ் மட்டுமே முழுமையான பிறப்புச் சான்றிதழ் ஆகும். இது, பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உரிமம் பெற மற்றும் வயது குறித்த முடிவான ஆதாரமாக விளங்குகிறது. குழந்தை பிறப்பை 21 நாள்களுக்குள் பதிவு செய்து இலவச சான்றிதழ் பெறலாம். அதன்பின் பதினைந்து வருடங்களுக்குள் ரூ.200 தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரைப் பதிவு செய்யலாம். இந்நிலையில், குழந்தை பிறந்து 15 வருடங்கள் நிறைவடைந்த பின்னும் பெயர் பதிவுஞ செய்யப்படாத நிகழ்வுகளுக்காக, தமிழ்நாடு பிறப்பு, இறப்பு விதிகள் 2000இல் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, கடந்த 2020 வரை பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், அதன் பின்னர் 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் பெற வரும் டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
Next Story