ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டு தரக்கோரி இருளர் குடும்பத்தினர் மனு
ஆர்.கே.பேட்டை வட்டாசியர் அலுவலகத்தில் புகார் செய்ய வாந்திருந்த இருளர் குடும்பத்தினர்.
ஆர்.கே.பேட்டை அருகே ஆக்கிரமிப்பு மீட்டு தரக்கோரி இருளர் குடும்பத்தினர் வட்டாட்சியரிடம் கோரிக்கை
ஆர்.கே.பேட்டை, செப்.25:
ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டுதரக் கோரி 5 இருளர் குடும்பத்தினர் வட்டாட்சியரிடம் புகார் மனு வழங்கினர். ஆர்.கே.பேட்டை அருகே ஆதிவராகபுரம் கிராமத்தில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனையில் 5 குடும்பங்களை சேர்ந்த இருளர்கள் கூரை வீடுகள் அமைத்து வசித்து வந்ததாகவும், குடும்ப வாழ்வாதாரத்திற்காக அவர்கள் அனைவரும் பெங்களூரு சென்று அங்கு குடும்பங்களுடன் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந் நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். கிராமத்தில் அரசு வழங்கிய இடத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் எங்கள் அனுமதியின்றி முருகன் என்பவரிடமிருந்து கிரையம் பெற்று வேலி அமைத்துள்ளதாக வட்டாட்சியரிம் புகார் மனு வழங்கினர். புகாரின் பேரில் உரிய விசாரனை நடத்தி நடவடிக்கை எடுக்கபப்டும் என்று வட்டாட்சியர் உறுதியளித்தார்.