முத்தாரம்மன் கோவிலில் பேட்டரி கார் சேவை துவக்கம்.

முத்தாரம்மன் கோவிலில் பேட்டரி கார் சேவை துவக்கம்.
முத்தாரம்மன் கோவிலில் பேட்டரி கார் சேவை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு புதிய பேட்டரி கார் சேவையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பக்தர்களின் வசதிக்காக கோவிலில் இருந்து கடற்கரை வரை பேட்டரி கார் சேவையை நேற்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ெதாடங்கி வைத்தார். ரூ.11 லட்சம் மதிப்பிலான இந்த பேட்டரி காரை நெல்லை நந்தாதேவி பயோ சக்தி நிறுவன உரிமையாளர் வி.ஏஸ்.நடராஜன் கோவிலுக்கு உபயமாக வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க.மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, கோவில் அறங்காவலர் குழு தலைவர் வே.கண்னன், உடன்குடி பஞ்சாயத்துயூனியன் துணைச் தலைவர் மீரா சிராஜூதீன், உடன்குடி டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் மால்ராஜேஷ், குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து துணைத் தலைவர் கணேசன், கோவில் அயல் பணி செயல்அலுவலர் வெங்கடேஷ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story