தூய்மையே சேவை விழிப்புணர்வு மனித சங்கிலி
Komarapalayam King 24x7 |25 Sep 2024 6:57 AM GMT
குமாரபாளையத்தில் நகராட்சி சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காந்தி பிறந்தநாளையொட்டி நகராட்சி சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு மனித சங்கிலி நகராட்சி கமிஷனர் குமரன் தலைமையில் நடந்தது. சேலம் சாலை ராஜம் தியேட்டர் அருகே துவங்கிய மனித சங்கிலியில், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ. சந்தானகிருஷ்ணன், தூய்மை பணியாளர்கள், ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் தூய்மை விழிப்புனர்வு கோஷங்கள் போட்டவாறும், விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தியவாறும் பங்கேற்றனர். நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, மனித சங்கிலி நிகழ்வை தொடங்கி வைத்தார். இதனையொட்டி நகரில் உள்ள அனைத்து வார்டுகளில் பொது இடங்களில் குப்பை கொட்டப்பட்டதை அகற்றி, சுத்தம் செய்து, கோலமிடப்பட்டன. பல்வேறு இடங்களில் சிறப்பு துப்புரவு பணி முகாம், பள்ளி, கல்லூரிகளில் தூய்மை பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு, நீர் நிலைப்பகுதியில் குப்பை, கல், மண் கொட்ட தடை பற்றிய விழிப்புணர்வு பதாதைகள் வைக்கப்பட்டன. நகரில் அனைத்து வார்டுகளில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
Next Story