திருக்காம்புலியூர் மேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த ஓலா எலக்ட்ரிக் பைக்கால் பரபரப்பு.

திருக்காம்புலியூர் மேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த ஓலா எலக்ட்ரிக் பைக்கால் பரபரப்பு.
திருக்காம்புலியூர் மேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த ஓலா எலக்ட்ரிக் பைக்கால் பரபரப்பு. கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள கட்டாரி கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் தினேஷ்குமார். இவர் இன்று காலை 9:30 மணி அளவில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் ரவுண்டானா மேம்பாலம், மதுரை- சேலம் பைபாஸ் சாலையில், அவரது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வண்டியில் சென்று கொண்டு இருந்தார். எலக்ட்ரிக் வண்டியில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி பகுதியில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீ பற்றியது. இதனை கவனித்த தினேஷ் குமார், உடனடியாக சுதாரித்து எலக்ட்ரிக் வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு கீழே இறங்கிவிட்டார். சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியதால் எலக்ட்ரிக் வாகனம் முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. இதனால் அந்த சாலையை கடந்து சென்ற வாகனம் ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இது தொடர்பாக தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எலக்ட்ரிக் வாகனத்தை தண்ணீர் ஊற்றி அணைத்தனர் தீயணைப்பு நிலைய வீரர்கள். கரூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story