கோஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அண்ணா வணிக மையத்தில் கோ-ஆப்டெக்ஸ் டெக்ஸில் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி துவக்கி வைத்தார்.
தீபாவளி பண்டிகையின் சிறப்பு விற்பனையை திண்டுக்கல் அண்ணா வணிக மையத்தில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி புதன்கிழமை காலை 11.30 மணியளவில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, முதல் விற்பனையை வழங்கினார். இவ்விழாவில் மண்டல மேலாளர் செந்தில்வேல், மேலாளர் (பொறுப்பு) முருகன் மற்றும் விற்பனையாளர்கள் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர். கைத்தறி ரகங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், பழனி, திண்டுக்கல் ஆகிய 3 விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை 84.94 லட்சங்கள் ஆகும். இந்த ஆண்டு 2024 தீபாவளி விற்பனை குறியீடாக 117 லட்சங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Next Story