ஏலகிரி மலையில் கிராம நிருவாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு
Tirupathur King 24x7 |25 Sep 2024 11:28 AM GMT
ஏலகிரி மலையில் சொத்துகளுக்கு எவ்வித உரிமை இல்லாத நபர்களுக்கு சுவாதீனச் சான்றிதழ் கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியரிடம் மனு
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் சொத்துகளுக்கு எவ்வித உரிமை இல்லாத நபர்களுக்கு சுவாதீனச் சான்றிதழ் கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியரிடம் மனு திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை நிலாவூர் பகுதியில் சேர்ந்த எழவி கவுண்டர் மகன்கள் குள்ளன் மற்றும் சின்னஎலவி ஆகும். குள்ளனுக்கு இரண்டு ஏக்கர் அளவிலான சொத்து உள்ளது இந்த நிலையில் உள்ளன் திருமணம் ஆகாமல் உயிரிழந்த உள்ளார் அதனைத் தொடர்ந்து அவருடைய தம்பியான சின்ன எலவியும் உயிரிழந்த நிலையில் சின்ன எலவி மகன்கள் காளி மற்றும் ஜெயராமன் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த இருவருக்கும் பெரியப்பாவான குள்ளன் இரண்டு ஏக்கர் அளவிலான நிலத்தை உயில் ஆவண வழியாக எழுதிக் கொடுத்ததாகவும் மேலும் காலங்காலமாக அதனை பயன்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் ஏலகிரி மலை பகுதியை பூர்வீகமாகக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் என்பவர் அந்த சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டு காளி மற்றும் ஜெயராமன் ஆகியோரை அழைத்து அந்த சொத்தில் உங்களுக்கு உரிமை இல்லை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக காளி மற்றும் ஜெயராமன் கிராம நிர்வாக அலுவலர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக தெரிகிறது இதனால் இருவரையும் பழி வாங்கும் நோக்கமாக கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் இந்த சொத்துக்கு எவ்வித சம்பந்தமில்லாத சிலர் மீது சுவாதீன சான்று வழங்கியுள்ளார். மேலும் சுவாதீனச் சான்று வழங்க அதிகாரம் தாசில்தாருக்கு மட்டுமே உள்ள நிலையில் அதனை முறைகேடாக எவ்வித சம்பந்தமில்லாத சிலருக்கு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்ததன் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் மேலும் சொந்த ஊரிலேயே இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருவதால் வேறு இடத்திற்கு மாற்ற கோரியும் திருப்பத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காளி மற்றும் ஜெயராமன் ஆகிய இருவரும் புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story