விழுப்புரத்தில் பொது மருத்துவ முகாம் நடந்தது

விழுப்புரத்தில் பொது மருத்துவ முகாம் நடந்தது
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி மற்றும் இ.எஸ்., செவிலியர் கல்லுாரி சார்பில் பொது மருத்துவ முகாம் நடந்தது.
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி மற்றும் இ.எஸ்., செவிலியர் கல்லுாரி சார்பில் பொது மருத்துவ முகாம் நடந்தது.இ.எஸ்., செவிலியர் கல்லுாரியில் நடந்த முகாமில், இந்திய மருத்துவ சங்கத் தலைவர் தங்கராஜ், செயலாளர் சவுந்தரராஜன், மகப்பேறு டாக்டர் சுதா, இயன்முறை டாக்டர் லோகநாயகி ஆகியோர், எலும்பு சிகிச்சை, உணவு முறைகள், மூட்டுவலி, பொது மருத்துவம் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளித்தனர்.முகாமில், 50க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு திண்ம பரிசோதனை செய்யப்பட்டது. முன்னதாக, முகாமிற்கு, வந்த டாக்டர்களை, இ.எஸ்., கல்விக் குழுமங்களின் நிர்வாக தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். முகாமில், 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.ஏற்பாடுகளை, இ.எஸ்., செவிலியர் கல்லுாரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி மாணவியர் புல முதன்மையர், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
Next Story