ராமநாதபுரம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையின் அடிப்படைத் தேவைகள் குறித்து கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜித் சிங் கலோனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். மேலும் அவர்கள் மனுவில் தெரிவித்ததாவது கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அறிவுசார் நவீன நூலகம் அமைத்து தரவும் , தில்லையேந்தல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழக்கரை DSP அலுவலகம் அருகில் உள்ள சாலையை உடனடியாக அமைத்து தர வேண்டியும் , கீழக்கரை கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் செல்லக்கூடிய சாலையை விரைவாக புதிய தார் சாலையாக அமைக்க வேண்டியும் , கீழக்கரை பேருந்து நிலையத்துக்குள் அனைத்து பேருந்துகளும் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நகராட்சியில் 91 துப்புரவு பணியாளர்கள் இருந்தும் மிகக் குறைவான பணியாளர்கள் பணி செய்வதால் கீழக்கரை நகர் முழுவதும் குப்பைகள் குவிந்த வண்ணம் உள்ளது அதனை ஒழுங்குப்படுத்தி கூடுதலாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வுக்கு வரவேண்டும் என்றும் கீழக்கரை நகர் முழுவதும் சுற்றி தெரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் , இளைஞர்கள் மற்றும் மாணவர்களை வழிகெடுக்கும் போதை பொருள்கள் மற்றும் கள்ள மதுபான விற்பனையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , கீழக்கரை ஜெட்டி பாலம் வருகை புரியும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொது கழிப்பிட வசதி இருக்கை வசதி, உயராக மின் கோபுர விளக்கு, மற்றும் சேதமடைந்த இடங்களை சரி செய்தல் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மனு வழங்கினர். இதில் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story